முகப்பு
கடலூர்

என்எல்சி இந்தியா நிறுவன பள்ளித் தலைமை ஆசிரியைக்கு விருது

என்எல்சி இந்திய நிறுவன மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜலட்சுமிக்கு சிறந்த தலைமை ஆசிரியைக்கான விருது வழங்கப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

என்எல்சி இந்திய நிறுவன மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜலட்சுமிக்கு சிறந்த தலைமை ஆசிரியைக்கான விருது வழங்கப்பட்டது.
கோவையில் செயல்பட்டு வரும் நேரு குழுமக் கல்வி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு கடந்த ஜனவரி 28-ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. விழாவில் தமிழக, கேரள மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 15 தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த தலைமை ஆசிரியர்களுக்கான  விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுக்காக இரு மாநிலத்தில் இருந்தும் சுமார் 540 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்வில் மத்திய அறிவியல் - தொழில் துறை ஆய்வு மையத்தின் சென்னைப் பிரிவு முதுநிலை விஞ்ஞானி அய்யாதுரை, நேரு கல்விக் குழுமத்தின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், நேரு கல்விக் குழுமத்தின் செயலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் விருதுகளை வழங்கினர். அந்த வகையில், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜலட்சுமிக்கு சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →