வரதட்சிணை புகார்: கணவர் மீது வழக்கு
நெய்வேலி அருகே வரதட்சிணை கேட்டு பெண்ணைத் துன்புறுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி அருகே வரதட்சிணை கேட்டு பெண்ணைத் துன்புறுத்தியதாக கணவர்
உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி அருகே உள்ள முதணை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கும், புவனகிரி அருகே உள்ள பெரியகுமிட்டியைச் சேர்ந்த ராஜசுந்தரி (22) என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.
இந்த நிலையில், வரதட்சிணைக் கேட்டு ராஜசுந்தரியை அருள்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதைச் செய்து வந்தனராம்.
இதுகுறித்து ராஜசுந்தரியின் தாய் நாகவள்ளி ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அருள்முருகன்,
அவரது தந்தை சந்திரன், தாய் ஷியாமளா, தம்பி சந்திரமோகன் ஆகியோர் மீது ஊ.மங்கலம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.