முகப்பு
கடலூர்

எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம் 

கடலூர் முதுநகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

கடலூர் முதுநகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 "முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதா' என்ற பெயரில் முஸ்லிம் தனியார் சட்டத்தை அழிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சார்பில், கடலூர் முதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் எம்.ஏ.ஹமீதுஃப்ரோஜ் தலைமை வகித்தார்.
 மாநிலச் செயலர் ஜி.அப்துல்சத்தார், தேசிய பெண்கள் முன்னணியின் மாநிலச் செயலர் எம்.தஸ்லீமா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
 கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.மக்புல்அஹமது, துணைத் தலைவர் ஐ.ஷர்புதீன், பொருளாளர் ஏ.முகமதுஹனிப், நகரத் தலைவர் எம்.ஐ.அப்துல்ரஹிம், துணைத் தலைவர் பி.ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டச் செயலர் எம்.முஜிபுர்ரஹ்மான் வரவேற்றார். நகரச் செயலர் ஏ.ஜெ.வஜ்ஹூல்லா நன்றி கூறினார்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →