கடலூர்

திண்டிவனத்தில் 17-இல் பிஎஸ்என்எல் மக்கள் நீதிமன்றம் 

தினமணி

திண்டிவனம் பி.எஸ்.என்.எல். உள்கோட்டத்துக்கு உள்பட்ட தொலைபேசி நிலையங்களில் கட்டணப் பாக்கி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக, திண்டிவனம் சார்பு நீதிமன்றத்தில் வரும் 17-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
 வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் நடைபெறும் இந்த நீதிமன்றத்தில் பங்கேற்க கட்டணப் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 எனவே, பாக்கி வைத்துள்ளவர்கள் 17-ஆம் தேதிக்குள் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணம் செலுத்தினால் நீதிமன்றத்திற்கு வருவதைத் தவிர்க்கலாம். அல்லது நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று சமரச அடிப்படையில் பணம் செலுத்தலாம்.
 நிலுவைத் தொகையை வசூலிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது வழக்குத் தொடர்வதைத் தவிர்க்க இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ஜெயக்குமார்ஜெயவேலு கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT