கடலூர்

தொழுநோய் விழிப்புணர்வுப் பேரணி 

தினமணி

மருங்கூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வுப் பேரணி பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர் தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்தார். பள்ளியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் எஸ்.மோகன்குமார் வரவேற்றார். சாரண ஆசிரியர் ஏ.முத்துக்குமரன், என்.சி.சி அலுவலர் ஏ.ராஜா, என்.எஸ்.எஸ் மாவட்ட திட்ட அலுவலர் சி.திருமுகம், தலைமையாசிரியர்(பொறுப்பு) ஞானசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் தொழுநோயின் அறிகுறிகள், வகைகள், சிகிச்சை முறைகள், ஊனத்தடுப்பு ஆகியவை குறித்து பண்ருட்டி மருத்துவ அலுவலர் இ.ராம்சுந்தர் விளக்கிப் பேசினார். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
 வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், புள்ளியியல் அலுவலர் அரவிந்த்பாபு, நகர எஸ்டிஎஸ் நடராஜ், ஞானமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் வட்டார மேற்பார்வையாளர் பரமசிவம் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT