கடலூர்

பொருள்கள் விலை நிர்ணய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

தினமணி

கடலூர் மாவட்டத்தில் பொருள்கள் விலை நிர்ணய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டுமென நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியது.
 தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டமைப்புத் தலைவர் (பொ) கோ.கண்ணன் தலைமை வகிக்க, சட்ட ஆலோசகர் சி.ஏ.தாஸ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலர் க.மெய்யழகன் சிறப்புரையாற்றினார்.
 கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் பொருள்களின் விலை நிர்ணய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். தனியார் பேருந்துகளில் அரசு அனுமதியில்லாமல் கூடுதல் கட்டணம் வசூலித்தல், உரிய சீருடை அணியாமல் வாகனம் இயக்குதல் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 நெல்லிக்குப்பம் ஈஐடி சர்க்கரை ஆலைக் கழிவுநீர், ரசாயனம் கலந்த புகை ஆகியவை மூலமாக பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தின விழாவை அமைச்சர் உள்ளிட்டோரை அழைத்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
 கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ப.கண்ணன், வடலூர் செல்வம், பண்ருட்டி ராஜேந்திரன், அண்ணாகிராமம் கிருஷ்ணராஜ், ஆர்.அருள், பொருளாளர் டி.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ஜெயமணி வரவேற்றார். சிவபாலன் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT