கடலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கக் கோரிக்கை

தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 இதுகுறித்து கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் லட்சிய முன்னேற்ற சங்கத் தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளாளர் ஆர்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
 இரு கால்களும் முடியாத மாற்றுத் திறனாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் 3 சக்கர சைக்கிள்கள் கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை.
 இதனால், மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்ய சென்று வரமுடியவில்லை.
 கடலூர் மாவட்டத்தில் கால் முடியாதவர்கள் அதிகமானோர் உள்ளதால் அவர்களுக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உதவித்தொகை வழங்கிட அரசு வெளியிட்டுள்ள ஆணையை செயல்படுத்த வேண்டும்.
 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ரூ.ஆயிரத்தை, 80 சதவீதத்துக்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT