கடலூர்

வெலிங்டன் நீர்த்தேக்க சீரமைப்புப் பணியில் ஐஐடி நிபுணர்கள்

தினமணி

திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த் தேக்கத்தின் கரையில் ஏற்பட்டுள்ள விரிசலைச் சரிசெய்ய சென்னை ஐஐடி நிபுணர்கள் குழுவின் உதவி கோரப்பட்டது.
 திட்டக்குடியை அடுத்த கீழச்செருவாயில் உள்ள வெலிங்டன் நீர்த் தேக்கம் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் சுற்று வட்டத்தில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
 ஏரியின் 14 துணை ஏரிகள் மூலம் கூடுதலாக 14 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதியைப் பெற்று வருகின்றன. இதில், 30 அடி வரையில் தண்ணீரைத் தேக்க முடியும்.
 இந்த நீர்த் தேக்கமானது 2016 -ஆம் ஆண்டில் ரூ. 6.41 கோடியில் கரை புனரமைப்பு - மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கரை புனரமைக்கப்பட்டது.
 மேலும், கரையின் இருபுறமும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு, கரையில் பொழியும் மழைநீர் வடிவதற்காக வடிகால், கரையின் மேல் பகுதியில் தார்சாலை ஆகியவை அமைக்கப்பட்டன.
 இந்த நிலையில், கடந்த டிசம்பர் 4 -ஆம் தேதி வெலிங்டன் கோனகரையில் சுமார் 50 மீட்டர் அளவுக்கு கரையின் ஒருபகுதி திடீரென உள் வாங்கியது.
 சில நாள்களில் கரையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட தார்சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடரேநே நீர்த் தேக்கத்துக்குச் சென்று பார்வையிட்டதோடு, அதனை சீரமைக்கும் பணிக்கும் உத்தரவிட்டார்.
 தொடர்ந்து, கரையைச் சீரமைக்கும் பணிக்காக சென்னை ஐஐடி (ஐய்க்ண்ஹய் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்) நிபுணர்கள் குழுவின் உதவியைப் பொதுப் பணித் துறை கோரியது.
 அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஐஐடி நிபுணர் குழுவினர் வெலிங்டன் நீர்த் தேக்கத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.
 மண்ணின் தரத்தை அறிந்து அங்கு என்ன மாதிரியான கட்டுமானப் பணியை மேற்கொள்ளலாம் என்று நிபுணர் குழுவினர் அறிக்கை அளிப்பார்கள் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவி
 த்தனர்.
 அரசிடமிருந்து தேவையான நிதி கிடைக்கப் பெற்றவுடன் நீர்த் தேக்கத்தை சீரமைக்கும் பணி தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT