கடலூர்

மாவட்ட இறகுப் பந்துப் போட்டி

தினமணி

சிதம்பரம் வயலூர் காமராஜ் சிறப்புப் பள்ளியின் உள்விளையாட்டரங்கில் கடலூர் மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கான அருண்பிரசாத் நினைவு இறகுப்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
 அறக்கட்டளைத் தலைவர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் போட்டிகளை தொடக்கி வைத்தார். மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், கேடயமும், இரண்டாம் இடம் பெற்ற வள்ளலார் குருகுருலம் பள்ளி அணிக்கு ரூ.7 ஆயிரமும், மாணவர்களுக்கான போட்டிகளில் முதலிடம் பெற்ற காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், கேடயமும், இரண்டாம் இடம் பெற்ற கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூ.7 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டன.
 சிறந்து 3 அணிகளுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் ஜி.ராஜமாணிக்கம் பரிசுகளை வழங்கினார். போட்டிகளில் பங்கேற்ற அனைத்துக் குழுக்களுக்கும் ஊக்கப் பரிசாக தலா ரூ.500 வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளிகளிலிருந்து 66 விளையாட்டு வீரர்கள் அடங்கிய 33 குழுக்கள் பங்கேற்றன.
 காமராஜ் பள்ளியின் உடல்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜன், அருள்ராஜ் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT