கடலூர்

சார் -ஆட்சியருக்கு பாராட்டு விழா

தினமணி

கடலூர் சார்- ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜானிடாம் வர்கீஸ், மீன்வளத் துறை உதவி இயக்குநராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவரது சேவையைப் பாராட்டும் வகையில், கடலூர் சிறகுகள் குழுவின் சார்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
 விழாவில் நம்ம கடலூர் இயக்கம், நேரு இளையோர் மையம், மக்கள் பாதை, கடலூர் செய்தியாளர்கள் மன்றம், கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கம், கடலூர் இந்திய மருத்துவக் கழகம், ஜேசிஐ, கடலூர் நுகர்வோர்கள் பேரவை, கடலூர் வெட்டிவேர் வளர்ப்பு சங்கம், கடலூர் ஓவியர்கள் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
 கடலூர் சிறகுகள் குழுவின் புதுவை ஒருங்கிணைப்பாளர் து.செல்வம் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கம் நிர்வாகிகள்
 பி.வெங்கடேசன், மு.மருதவாணன், இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் கிஷோர், கண்ணன், நம்ம கடலூர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேப்டன் கவுஸ், நேரு இளையோர் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன் ராணி, ஜேசிஐ அமைப்பின் இரா.சண்முகம், நுகர்வோர் கூட்டமைப்பின் தி.அருள்செல்வன், மக்கள் பாதையின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 தொடர்ந்து, சார்- ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் ஏற்புரையாற்றினார். சிறகுகள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மனோகர் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஏஞ்சலின் செரில் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT