முகப்பு
கடலூர்

லாரி திருட்டு: 2 பேர் கைது

நெய்வேலியில் லாரியை திருடியதாக 2 பேரை மந்தாரக்குப்பம் போலீஸார் கைது செய்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

நெய்வேலியில் லாரியை திருடியதாக 2 பேரை மந்தாரக்குப்பம் போலீஸார் கைது செய்தனர். 
நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் பிரதான சாலையில் வசிப்பவர் சிவசுப்பிரமணியன் (64), லாரி உரிமையாளர். இவர், நெய்வேலியை அடுத்துள்ள பெரியாகுறிச்சியில் வசித்து வருகிறார். கடந்த மே 31-ஆம் தேதி இரவு லாரியை அதன் ஓட்டுநர் என்.எல்.சி நிறுவனத்தின் 2-ஆவது சுரங்க நுழைவு வாயில் அருகே நிறுத்திவிட்டு, தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். மறுநாள் காலையில் திரும்பி வந்தபோது, லாரியை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், குறிஞ்சிப்பாடி வட்டம், உள்மருவாய் கிராமத்தை அடுத்துள்ள அரங்கமங்கலம் நாராயணன் மகன் ரகுபதி (27), கருங்குழிபாட்டை வீதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் அருண்குமார், அரிசி ஆலை தெருவைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் ஆகியோர் லாரி திருடியது தெரியவந்ததாம். மேலும், கருங்குழி ஓடை ஓரமாக லாரியை நிறுத்தி வைத்திருந்ததும் தெரிய வந்தது. 
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் லாரியை மீட்டு, ரகுபதி, அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான செந்தமிழ்செல்வனை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →