கார்த்தி சிதம்பரம் கைது: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மங்களூர் மேற்கு வட்டாரத் தலைவர் எல்.ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலர் என்.நவீன்குமார், மங்களூர் கிழக்கு வட்டாரத் தலைவர் செüவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொருளாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் கோபி, பொருளாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல, பெண்ணாடத்தில் மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் மணிவாசகம், மாவட்டச் செயலர் தமிழரசன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் விஜயகுமார், நல்லூர் வட்டாரத் தலைவர் அசோக்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
பண்ருட்டியில்... பண்ருட்டி நகர காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் முகமது சபியுல்லா, ஏ.கே.மணி, வர்த்தக பிரிவின் மாநிலச் செயலர் அன்பழகன், மாவட்டச் செயலர்கள் தர்மசிவ ரெட்டியார், சிவ நந்தகோபால், வட்டாரத் தலைவர் குணசேகரன், நகரப் பொதுச் செயலர் ரவி, நாகராஜன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.