முகப்பு
கடலூர்

ஜனநாயக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து, ஜனநாயக விவசாய சங்கத்தினர் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

விருத்தாசலத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து, ஜனநாயக விவசாய சங்கத்தினர் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஐனநாயக விவசாய சங்கத் தலைவர் ராமர், கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
 தொடர்ந்து, வேளாண் உதவி இயக்குநர் ரமேஷ், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசினார். அப்போது, பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் உடனடியாக ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் இரண்டையும் உதவி வேளாண் இயக்குநர் அலுவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதன் இயக்குநர் ரமேஷ் தெரிவித்தார். இதனை ஏற்று, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →