கடலூர்

கோயில் குளம் தூர்வாரும் பணி ஆய்வு

DIN

திட்டக்குடியில் அமைந்துள்ள வைத்தியநாதசுவாமி கோயில் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 பின்னர், பெருமுலை கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்துக்குச் சென்றவர் அங்குள்ள வசதிகள், வீடுகளின் நிலை குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 
பின்னர், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்ததாக கண்டறியப்பட்ட பீமனேரி பகுதியைப் பார்வையிட்டார். 
அப்போது வட்டாட்சியர் ப.சத்யன், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT