முகப்பு
கடலூர்

திருச்செந்தூர் விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லக் கோரிக்கை

சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல வேண்டும் என்று நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்தது.

Updated On : 8 அக்டோபர் 2018, 9:17 am IST
பகிர்:

சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல வேண்டும் என்று நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
 அனைத்து நுகர்வோர், பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்து, அயோடின் உப்பு குறித்தும், உணவுப் பாதுகாப்பு உறுப்பினரின் பணி குறித்தும் பேசினார். பக்கிரி, கணேசன், சையத் இஸ்மாயில், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னப்பொண்ணு, காமராஜ், கெüரி, அண்ணாமலை, ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார். பொதுச் செயலர் காமராஜ் வரவேற்றார்.
 கூட்டத்தில், சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே பொதுமேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பண்ருட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ராஜாஜி சாலை, சென்னை சாலை, சந்தை அருகே ஆட்டோக்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வோர் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைத்து, வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.