முகப்பு
கடலூர்

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

பண்ருட்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 8 அக்டோபர் 2018, 9:20 am IST
பகிர்:

பண்ருட்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
 பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் மகன் சதீஷ் (20).
 இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்து, அந்தக் காட்சிகளை தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்துகொண்டார். பின்னர், இந்தக் காட்சிகளை தனது நண்பர்களுக்கு கட்செவி அஞ்சலில் அனுப்பினாராம்.
 இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழும தலைவி ஜெயந்தி ரவிச்சந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சதீஷை கைதுசெய்தனர்.
 பின்னர் அவரை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் கணேஷ், சதீஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.