கடலூர்

நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கக் கோரிக்கை

DIN

நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் மொத்தம் 140 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூ.2,580 சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 7-ஆவது ஊதியக் குழுவில் ரூ.4,680 ஊதியம் வழங்கிட உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில், கடந்த 27.12.17 முதல் புதிய ஊதியம் வழங்கப்பட வேண்டுமாம். ஆனால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்காமல், பழைய தொகையை மட்டுமே அந்தந்த ஊராட்சிகளில் வழங்கப்பட்டு வருகிறதாம்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் தனி அலுவலர்களிடம் சென்று கேட்டபோது, எந்தவித பதிலும் தரவில்லையாம். 
 இந்த நிலையில், தமிழ்நாடு குடிநீர் மோட்டார் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் பொன்னுசாமி, செயலர் ராஜலிங்கம், துணைச் செயலர் ஆனந்தன், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் புதன்கிழமை விருத்தாசலத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், 7-ஆவது ஊதியக்குழு அடிப்படையில் உயர்த்தப்பட்ட சம்பளத்தை விரைவில் வழங்கவேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT