கடலூர்

தொழில் சங்கத்தினர் ஆலோசனை

DIN

கடலூர் மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் மத்திய, மாநில தொழில்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலர் பி.கருப்பையன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் மு.சு.பொன்முடி, ஏஐடியூசி மாவட்டச் செயலர் பி.துரை, துணைச் செயலர் வி.குளோப், என்எல்சி தொமுச சார்பில் கே.பாலசுப்ரமணியன், ஐஎன்டியூசி சார்பில் இ.பலராமன், ஐ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்தக் கூட்டத்தில், தொழில்சங்க உரிமைகளை பறித்தல், தொழிலாளர் நல வாரியங்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்துத் தொழில்சங்க அமைப்புகளும் ஏற்கெனவே
செய்த முடிவின்படி வருகிற 16-ஆம் தேதி மாவட்ட அளவில் கூட்டாக ஆர்ப்பாட்டம் நடத்துவது. மத்திய பாஜக அரசின் தொழிலாளர், மக்கள் விரோத போக்கை கண்டித்து மத்திய தொழில்சங்கங்கள் ஏற்கெனவே எடுத்த முடிவின் படி வருகிற ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
கூட்டத்தில் பல்வேறு தொழில்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT