முகப்பு
கடலூர்

கடலூரில் 23 மி.மீ. மழை

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. 

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:38 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. 
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் மழை தொடர்ந்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 23.40 மி.மீ. மழை பதிவானது. 
மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: சிதம்பரம் 14.60, குடிதாங்கி 13.75, புவனகிரி 11, பண்ருட்டி 10, வானமாதேவி 8, குறிஞ்சிப்பாடி 7,  சேத்தியாத்தோப்பு, வடக்குத்து தலா 5, கொத்தவாச்சேரி, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை தலா 3, காட்டுமன்னார்கோவில் 2, அண்ணாமலை நகர் 0.20. மாவட்டத்தில் மொத்தம் 129.15 மி.மீ மழையும், சராசரியாக 5.17 மி.மீ. மழையும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.