கடலூர்

கந்துவட்டி கேட்டு மிரட்டல்: ஆட்சியரகத்தில் புகார்

DIN

கந்து வட்டி கொடுமை தொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 குறிஞ்சிப்பாடி அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஆராவமுதன் மனைவி யசோதா, இவரது மகன் மோகன்தாஸ், மருமகள் உதயகுமாரி ஆகியோர் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இரா.ஆராவமுதன் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக கடந்த 30 ஆண்டுகளாக உள்ளார். தனது தொழில் தேவைக்காக கடந்த 2013-ஆம் ஆண்டு மானடிக்குப்பத்தைச் சேர்ந்தவரிடம் ரூ.1.50 கோடி கடனாகப் பெற்றார். இந்தத் தொகைக்கான அசலை
2017-ஆம் ஆண்டு வரை செலுத்தியதோடு, வட்டியாக ரூ.1.30 கோடி வரையில் திருப்பிச் செலுத்தினார். ஆனாலும், கந்து வட்டிக் கேட்டு கடந்த 3-ஆம் தேதியன்று ஆராவமுதனை கடத்திச் சென்றதோடு, மோகன்தாûஸயும் அடித்து சித்தரவதை செய்தனர். 
இதுதொடர்பாக நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக காவல்துறையினர் எங்களை மிரட்டி வருகின்றனர். மேலும், வெள்ளிக்கிழமை அதிகாலையில் எங்களது வீட்டுக்கு வந்த காவல் துறையினர் பெண்களிடம்  ஒழுங்கீனமாக நடந்துகொண்டதோடு, வீட்டிலிருந்த உறவினர்கள் பக்தவச்சலம், குணசேகரன் ஆகியோரை தாக்கி இழுத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்குள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. 
எனவே, கந்து வட்டிக் கேட்டு மிரட்டுவோர் மீதும், அவருக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்
பிட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT