கடலூர்

பிஎஸ்என்எல் சார்பில் இன்று மக்கள் நீதிமன்றம்

DIN

சிதம்பரம் பி.எஸ்.என்.எல். உள்கோட்டத்துக்கு உள்பட்ட தொலைபேசி நிலையங்களில் கட்டண பாக்கி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக, மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப்.15) நடத்தப்படுகிறது. 
சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, பிஎஸ்என்எல் சார்பில் அன்று காலை 10.30 மணிக்கு சிதம்பரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்த நீதிமன்றம் நடைபெறுகிறது. 
இதுதொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே 
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
 கடிதம் பெற்றவர்கள் முன்னதாக கட்டண பாக்கியை செலுத்தினால் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க வேண்டியதில்லை. 
இல்லையெனில் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று சமரச அடிப்படையில் பணம் செலுத்தலாம். பாக்கித் தொகை செலுத்தாதவர்கள் மீது பிஎஸ்என்எல் நிர்வாகம் வழக்கு தொடர்வதைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிஎஸ்என்எல் கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட பொது மேலாளர் ஜெயக்குமார்ஜெயவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT