கடலூர்

லாரிகள் நேருக்குநேர் மோதல்: 3 பேர் சாவு

DIN

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பொட்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). லாரி ஓட்டுநர். இவர் லாரியில் நாமக்கல்லில் இருந்து கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி வந்துகொண்டிருந்தார். லாரியில் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த பாபு (22), பிரித்விராஜ் (22), சரத் (20) ஆகியோரும் இருந்தனர். லாரி விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, இவர்களது லாரியும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
எதிரே வந்த லாரியானது, நெய்வேலியில் இருந்து பழுப்பு நிலக்கரி ஏற்றிக் கொண்டு அரியலூருக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (49) ஓட்டிச் சென்றார். மோதிய வேகத்தில் இரு லாரிகளும் சாலையில் கவிழ்ந்தன. இதில், லாரி ஓட்டுநர்கள் பழனிவேல், மகாலிங்கம் மற்றும் பாபு ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பழனிவேல் ஓட்டிவந்த லாரியிலிருந்த 50 கறிக் கோழிகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.
விபத்து குறித்து தகவலறிந்த ஊ.மங்கலம் போலீஸôர், சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பிரித்விராஜ், சரத் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விருத்தாசலத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஊ.மங்கலம் போலீஸôர் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT