கடலூர்

விநாயகர் சதுர்த்தி நாட்டியாஞ்சலி

DIN

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விருத்தாசலத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் விநாயகர் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கோயில் கலையரங்கத்தில் சித்தி விநாயகர் இறைபணி மன்றம், மாஸ்டர் அகாதெமி சார்பில், பாபு, வகிதா பானு குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. விநாயகர் பக்தி பாடலுக்கு குழுவினர் காலை முதல் இரவு வரை பரத நாட்டியமாடினர். திரளானோர் கண்டு களித்தனர்.  நாட்டியாஞ்சலி நிகழ்த்திய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, கோயில் உள்பிரகாரத்திலுள்ள ஆழத்து பிள்ளையாருக்கு சந்தனம் சார்த்தல், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT