கடலூர்

நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க எச்சரிக்கை விளக்குகள்: காவல் துறை நடவடிக்கை

DIN

கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைப் பகுதிகளில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் விபத்துகளை குறைத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ப.சரவணன் மேற்கொண்டு வருகிறார். கடலூர் மாவட்டம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.45, வேப்பூர் காவல் நிலைய சரகம், ஜவதுகுடியில் தொடங்கி ராமநத்தம் சுங்கச் சாவடி வரை சுமார் 30 கிமீ தொலைவுக்கு செல்கிறது. 
இந்தச் சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 5 வழக்குகள்,  பிப்ரவரி மாதம் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன விபத்தில் 11 பேர் இறந்துள்ளனர்.  எனவே, விபத்துகளை குறைத்திடும்  வகையில், நிலுவையில் இருந்த சாலை பாதுகாப்பு நிதி ரூ.19.50 லட்சத்தை பெற்று காவல்துறை சார்பில் விபத்தை தடுக்கும் எச்சரிக்கை ஒளி விளக்குகள் (அஸ்ரீஸ்ரீண்க்ங்ய்ற் தங்க்ன்ஸ்ரீங் ல்ர்ஜ்ங்ழ் ச்ப்ஹள்ட் ப்ண்ஞ்ட்ற்ள்)  அமைக்கப்பட்டு வருகின்றன. 
 அதன்படி எழுத்தூர், வெங்கனூர், ஆவட்டி, கல்லூர் கழுதூர், வேப்பூர், சேப்பாக்கம் ஆகிய இடங்களில் எச்சரிக்கை ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 
மேலும், சாலையில் உள்ள மரங்களில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்தப்படுகிறது. போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் மின் விளக்கு அமைக்கப்படுகிறது. அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து வேகத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தப் பேரிகாடுகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் மேற்பார்வையிட்டார். மேலும், இரவில் வாகன ஓட்டுநர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, தேநீர் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT