கடலூர்

மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் கல்லறைத் தோட்டத்துக்கு உடல்களை கொண்டுசெல்வதில் சிரமம்

DIN

கடலூரில் கல்லறைத் தோட்டம் எதிரே மழைநீர் வடிகால் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தால், உடல்களைக் கொண்டுசெல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. 
கடலூர் - விழுப்புரம் சாலையில் செம்மண்டலத்தில் கல்லறைத்தோட்டம் அமைந்துள்ளது. இங்கு, ஏஎல்சி திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சார்பில், உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதை இந்தச் சாலையிலேயே அமைந்துள்ளது. இந்தப் பாதையின் முன்புறம் கடலூர் பெருநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் திட்டப் பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இந்தப் பணிகள் முடிக்கப்படாததால் கடந்த 8 மாதங்களாக பள்ளம் முடப்படாமல் உள்ளது. இதனால், அந்த பாதை வழியாக இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அதாவது, சவப்பெட்டியுடன் வருவோர் பெரிய பள்ளத்தில் இறங்கிச் செல்ல வேண்டியுள்ளது. 
இதுகுறித்து முன்னாள் மாணவர் கூட்டமைப்புத் தலைவர் ஜா.அகஸ்டின்பிரபாகரன் கூறியதாவது: இந்தப் பிரச்னை தொடர்பாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையர், பொதுப் பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனுவும் அளித்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிரிழந்தவர்களை அசெளகரியம் இல்லாமல் புதைக்க முடியவில்லை. பள்ளத்தில் இறங்கி சவப்பெட்டியை மாற்றும்போது கீழே தவறி விழுந்து பலர் காயமடைந்துள்ளனர். ஒரு சம்பவத்தில் சவப்பெட்டியே  பள்ளத்தில் விழுந்துவிட்டது. 
இந்தக் கல்லறையில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் வசித்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்படுகின்றன. நினைவு நாள் கடைப்பிடிப்பு, பிரார்த்தனை, கல்லறைத் திருவிழா ஆகிய காரணங்களுக்காக பலர் கல்லறை தோட்டத்துக்கு வருகின்றனர். 
இதற்காக வரும் முதியவர்கள் இந்த பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து பள்ளத்தை மூடுவதற்கு மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT