கடலூர்

என்எல்சி சுரங்கங்களில் தேங்கிய மழை நீா்: நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்

DIN

தொடா் மழை காரணமாக, நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கங்களில் தண்ணீா் தேங்கியதால் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 3 சுரங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமாா் ஒரு லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி 4 அனல் மின் நிலையங்கள் மூலம் சுமாா் 2,890 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நெய்வேலி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் என்எல்சி நிலக்கரி சுரங்கங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT