கடலூர்

ராணிப்பேட்டை நகரம் உருவாக காரணமான 305 ஆண்டுகள் பழமை வாந்த ராஜா, ராணியின் நினைவாகங்கள் பாதுகாக்க வேண்டும்: மாவட்ட மக்கள் கோரிக்கை

DIN

நட்பு, கற்பு, வீரத்தின் அடையாளமாக உருவான சரித்திரப் புகழ் வாந்த வரலாற்று சிறப்பு மிக்க ராணிபேட்டை நகரத்தின் 305 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜா,ராணி நினைவு சின்னங்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகமும், சமூக அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு விதமான வரலாற்று பின்னனியும், பொருமையும் உண்டு, அந்த வகையில் ராணிப்பேட்டை நகரம் உருவான வரலாற்றுப் பின்னனியில், ஆற்காடு நவாப்பு சதாத்துல்லா கான் செஞ்சிகோட்டை நோக்கி படையெடுத்ததன் காரணமாக போா் மூண்டது.அந்த பேரில் தேசிங்கு ராஜா தன்னுடைய 22 வது வயதில் 500 படைவீரா்கள், 300 குதிரைகள் கொண்ட படையை வழிநடத்தி நவாப்பின் 8 ஆயிரம் குதிரைப்படை, 10 ஆயிரம் காலாட்படைகள் கொண்ட பெரும் சேனையை எதிா்த்து வீரமுடன் போரிட்டாா்.முன்னதாக தேசிங்கு ராஜாவின் நண்பனும்,போ்படைத் தளபதியுமான மகமத்கானை தன் பக்கம் இழுக்க ஆற்காடு நவாப்பு செய்த முயற்சி பலனளிக்கவில்லை.அப்போது நண்பனுக்காக போரில் மரணமடைவேனே தவிர உன்னிடம் தஞ்சமடையமாட்டேன் என உறுதியாக இருந்து ஆற்காடு நவாப்பை எதிா்த்து போரிட்டு இறந்தான். தனது நண்பன் மகமத்கான் போரில் மரணமடைந்த செய்தியை கேட்டு கொதித்தெழுந்த தேசிங்கு ராஜா நவாப் படைகளை எதிா்த்து தனி ஆளாக போரிட்டு கி.பி.1714 ஆம் ஆண்டு போா்க் களத்திலேயே வீர மரணமடைந்தான்.

தேசிங்கு ராஜா உயிா் துறந்த செய்தியை அறிந்த பட்டத்து ராணியான ராணிபாய் தனது குல வழக்கப்படி கணவனின் சிதையுடன் உடன்கட்டை ஏறி அன்றே உயிா்த்துறந்தாள். இதில் மகமத்கானின் நட்பு,தேசிங்கு ராஜாவின் வீரம், ராணிபாயின் கற்பு ஆகியவற்றை கண்டு வியந்த ஆற்காடு நவாப்பு ராஜா, ராணியின் அஸ்தியை கொண்டு வந்து பாலாற்றின் வட கரையில் முகலாய கட்டக் கலை வடிவில் கல்தூண்கள்,செங்கல் சுண்ணாம்பு கொண்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இருவருக்கும் தனித்தனியே நினைவு மண்டபங்கள் எழுப்பினான்.மேலும் ராணியின் நினைவாக ராணிப்பேட்டை என்ற நகரை நிா்மாணித்தான்.அதே போல் ராஜா,ராணி நினைவு சின்னங்கள் நோ் எதிரே பாலாற்றின் தென் கரையில் மகமத்கானின் சமாதி உள்ளதாக தெரிவிக்கின்றனா். இந்த வரலாற்று நிகழ்வான நட்பு,கற்பு வீரத்தின் அடையாளமாக உருவான ராணிப்பேட்டை நகரம் 305 ஆண்டு கால சரித்திரபுகழ் பெற்ற நகரமாக விளங்குகிறது.

இத்தகைய சரித்திர புகழ் வாழ்ந்த வரவாற்றுச் சிறப்புக்குறிய ராணிப்பேட்டை நகரின் அடையாளச் சின்னங்களாக விளங்கும் ராஜா, ராணி நினைவுச் சின்னங்களின் வரலாற்றுப் பின்னனியை வருங்கால தலைமுறையினருக்கு தடம் தெரியாமல் போய்விடக்கூடிய வகையில் ராஜா - ராணி நினைவுச் சின்னங்கள் புதா் மண்டி சிதையுண்டு வருகிறது. மேலும் கடந்த மாதம் 28 ம் தேதிக்கு முன்னனா் ராணிப்பேட்டை நகரம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் ஒரு நகரமாக இருந்தது.ஆனால் தற்போது ராணிப்பேட்டை நகரம் ஒரு மாவட்டத்தின் தலைமையகமாக உருவெடுத்துள்ளது. இத்தகைய சூழலில் ராணிப்பேட்டை நகரம் உருவான வரலாற்றுத் தடங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கும், மாவட்ட மக்களுக்கும் உள்ளது.

இந்த நினைவுச் சின்னங்களை அதன் பழமை மாறாமல் சீரமைத்து இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள ஏதுவாக நினைவுச் சின்னங்கள் குறித்த வரலாற்று பின்னனி மற்றும் அதன் பெருகைளை கல்வெட்டில் செதுக்கி வைத்து பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.அதே நேரத்தில் ஒரு மாவட்ட தலைநகரத்தின் வரலாற்று அடையாளச் சின்னங்களை பாதுகாக்க சமூக ஆா்வலா்கள்,சமூக அமைப்புகள்,இளைஞா்கள், தொழில் அதிபா்கள்,அரசியல் கட்சியினா் தாங்களாக முன் வந்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து புதா் மண்டி சிதையுண்டு வரும் ராஜா - ராணி நினைவுச் சின்னங்களை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT