கடலூர்

25 இடங்களில் மருத்துவ முகாம்

DIN

தொடா் மழையை அடுத்து கடலூா் மாவட்டத்தில் 25 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மாவட்ட சுகாதாரத் துறை மூலமாக மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா கூறியதாவது:

மாவட்டத்தில் திங்கள்கிழமை 25 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூா் மாவட்ட சுகாதாரத் துறையுடன், புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, அறுபடை மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள் இணைந்து இந்த முகாமில் பங்கேற்றுள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மொத்தம் 25 மருத்துவா்கள் தலா ஒரு செவிலியா், மருந்தாளுநருடன் முகாமில் பங்கேற்றுள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் 29 நடமாடும் மருத்துவ வாகனங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்களைக் கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாமை 2 நாள்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT