கடலூர்

வட்டார போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

DIN

கட்டாயக் கல்வி குறித்த வட்டார அளவிலான  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில், பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுற்றம்- சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குமராட்சி வட்டார அளவில் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குமராட்சி வட்டார வள மைய அலுவலகத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரா.பாலமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் டி.தமிழ்மணி, ஜெயக்குமார் ஜான்சன், ராஜசேகர் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT