கடலூர்

மது விலக்கு விழிப்புணர்வுப் பேரணி

DIN

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், மது விலக்கு விழிப்புணர்வுப் பேரணி கெங்கைகொண்டானில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கம்மாபுரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் உஷா தலைமை வகித்தார். மருத்துவர் ராமச்சந்திரன், நுகர்வோர் சங்கத் தலைவர் தங்கம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். பவர் சிட்டி அரிமா சங்க மாவட்டத் தலைவர் லட்சுமி
நாராயணன், கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்திலிருந்து இந்தப் பேரணியை டி.ஆர்.எம்.சாந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராஜமாரியப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பாலாஜி நகர் அங்கன்வாடி மையத்தில் முடிவடைந்தது. பேரணியில் அங்கன்வாடிப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், மகளிர் பிரதிநிதிகள், அரிமா சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் உன்னி கிருஷ்ணன், நூலகர் வேல்முருகன் ஆகியோர் பேரணியை வழிநடத்தினர். 
பேரணியில் பங்கேற்றவர்கள் மதுவிலக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கினர். மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் மீனாள் பேரணியை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT