கடலூர்

ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: மாவட்ட ஆட்சியர்

DIN


: தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி பெற தகுதியானவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
 வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினருக்கு சிறப்பு நிதியாக தலா ரூ.2 ஆயிரம்  வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அண்மையில் அறிவித்தார். இதற்கான ஆயத்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதிக்கான கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர் தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்படும். 
 வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்கள், அன்னோதயா குடும்ப அட்டையில் அரிசி பெறுவோர் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம். எனினும், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பின்போது விடுபட்டுள்ளதாக சிலர் மனு அளித்து வருகின்றனர். அவ்வாறு மனு அளிப்பவர்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலம், கோயில் நிலங்களில் குடியிருந்து கணக்கெடுப்பில் விடுபட்டவர்களும் மனு அளிக்கலாம். அந்தந்த கிராம ஊராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம். வெள்ளைத்தாளில் எழுதியும் மனு அளிக்கலாம். வருகிற 28-ஆம் தேதிக்குள் இந்தத் திட்டப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதால் அதற்குள் பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் அதிகாரியை பாடகர் வேல்முருகன் கைது!

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT