கடலூர்

வடலூரில் தைப்பூசப் பெருவிழா: ஜன. 21-இல் உள்ளூர் விடுமுறை

DIN

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூசப் பெருவிழா ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது தைப்பூச ஜோதி தரிசனமாகும். இந்த நாளில், 7 திரைகளை விளக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படும். இதைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். புகழ் பெற்ற இந்த விழாவானது, வருகிற 21- ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளுக்கு மாற்றாக பிப். 2 -ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT