கடலூர்

பள்ளியில் சாதிய வன்கொடுமை: சார்-ஆட்சியரகத்தில் புகார்

DIN

அரசுப் பள்ளியில் சாதிய வன்கொடுமை தொடர்பாக சார்-ஆட்சியரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
 கடலூர் வட்டம், வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் வியாழக்கிழமை கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
 வெள்ளக்கரை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அப்பாற்பட்டவர்கள் பள்ளியில் சாதிய ரீதியிலான தூண்டுதலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது. 
 எனவே, இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மோதல்களை களைவதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT