கடலூர்

தன்னிலை அறிதல் முகாம்

DIN


பண்ருட்டி வட்டாரம், மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மையம் சார்பில் காட்டாண்டிக்குப்பத்தில் உள்ள தனியார் முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் தன்னிலை அறிதல் முகாம்' அண்மையில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் தலைமை வகித்தார். நம்பிக்கை மைய ஆலோசகர் ஜி.காமராஜ் வரவேற்றார். காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.சுமித்ரா பேசுகையில், எச்ஐவி, எய்ட்ஸ் நோய் தடுப்பு, பெண்கள் நலம் குறித்து விளக்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கே.கதிரவன் முகாம் குறித்து உரையாற்றினார். முதுநிலை மருத்துவ மேற்பார்வையாளர் நடராஜ் காசநோய் பரவும் விதம் குறித்து கருத்துரை வழங்கினார். 
முகாமில் காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் சிவப்பிரகாசம், ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, ஆய்வக நுட்பநர் என்.சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 300 பேருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வக நுட்புணர் கிறிஸ்டி ஸ்டெல்லா
நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT