கடலூர்

தைப்பூசம்: ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல்

DIN

தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் புதன்கிழமை தொடங்கியது.
வடலூரில் உள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்வர்.
விழாவை முன்னிட்டு ஜன.13 முதல் 15-ஆம் தேதி வரை தருமச் சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. 
தொடர்ந்து 16 முதல் 19-ஆம் தேதி வரையில் ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. 
இதையடுத்து 20-ஆம் தேதி கொடியேற்றமும், 21-ஆம் தேதி ஜோதி தரிசனப் பெருவிழாவும், 23-ஆம் தேதி மேட்டுக்குப்பதில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது. காணும் பொங்கல் நாளான வியாழக்கிழமை வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஏராளமானோர் வருகை தந்து தரிசனம் செய்தனர்.ஞானசபை வளாகத்தில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT