கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி பூஜை

DIN

திருவதிகை, வீரட்டானேஸ்வரர் கோயிலில் தை மாத பெளர்ணமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வந்து வீரட்டானேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று சிறப்புப் பூஜையும், பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. தை மாத பெளர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணி முதல் மாட வீதியை திரளான பக்தர்கள் வலம் வந்தனர். 
இரவு 7 மணி முதல் 12 மணி வரை  பெரியநாயகி அம்பாள் கோயில் குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இரவு 11 மணி முதல் 12 மணி வரை மூலவர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT