முகப்பு
கடலூர்

மணல் தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் இணைந்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர

Updated On : 23 ஜனவரி 2019, 8:43 am IST
பகிர்:

தமிழக விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் இணைந்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் தட்டுப்பாடு, மணல் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இழப்பு ஆகியவற்றைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  கட்டடத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.எம்.வேலு தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் துரை.ஜோதிவேலு, நகரத் தலைவர் பி.தண்டபாணி, நகரச் செயலர் எஸ்.செல்வமுருகன், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பொன்.குமார் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன 
உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.