கடலூர்

தெரு விளக்குகள் உடைப்பு: மாணவர் உள்பட 2 பேர் கைது

DIN

தெரு விளக்குகளை உடைத்ததாக மாணவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 திருக்கண்டேஸ்வரம் முதல் விஸ்வநாதபுரம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சுமார் 25  விளக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பிரபாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  
அதன் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். 
இதில், வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த சீத்தாராமன் மகன் கோவன்ராஜ் (21), ஞானவேல் மகன் முல்லைவேந்தன், கனகசபை மகன்கள் ராஜா (19), ரவி ஆகியோர் தெரு விளக்குகளை கல்வீசி உடைத்தது தெரிய வந்தது.  இதையடுத்து, ஐடிஐ மாணவரான ராஜா, கோவன்ராஜ் ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT