கடலூர்

அனுமதியற்ற தனியார் கல்வி நிறுவனம்: முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை

DIN


நெய்வேலியில் அனுமதியின்றி தனியார் கல்வி நிறுவனம் செயல்படுவதாக எழுந்த புகார் குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தனியார் கல்வி நிறுவனம் ஐஐடி, ஜேஇஇ ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி, நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வருகிறது. 
ஆனால், இந்த நிறுவனம் முறையாக அனுமதி பெறாமலும், சென்னையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகள், விருத்தாசலத்தில் பிளஸ் 1 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நேரத்தில் நெய்வேலியில் வகுப்புகள் எடுத்து வருவதாகவும் புகார் எழுந்தது. 
இதுதொடர்பாக வடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் திருமுருகன் கடந்த 18 ஆம் தேதி விசாரணை செய்து, அதுகுறித்த அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்தார். 
இதன் மீது முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி வெள்ளிக்கிழமை மாலை விசாரணை மேற்கொண்டார். 
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அறக்கட்டளை நிர்வாகி விஜயகுமாரை கடலூருக்கு வரவழைத்து விசாரணை நடத்தினோம். அப்போது, பள்ளி நேரத்தில் மாணவர்களை தனி இடத்தில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டது. மேலும், முறையாக அனுமதி பெற்று இந்தப் பயிற்சி மையம் நடக்கிறதா என்பது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதற்கு காலஅவகாசம் கேட்கப்பட்டதால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், விதிமீறல்கள் தெரியவரும்பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT