கடலூர்

காய்கறி, பழங்களை பதப்படுத்தும் பயிற்சி

DIN

தொழில் முனைவோருக்கான வணிக முறையில் காய்கறி, பழங்களைப் பதப்படுத்தும் பயிற்சி, விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்.6 முதல் 8-ஆம் தேதி வரை தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
 கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர்கள் மற்றும் பண்ணை மகளிருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். முதலில் வரும் 30 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
 வரும் பிப்.4-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04143-238353 என அதில் தெரிவித்துள்ளார் கண்ணன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT