கடலூர்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

DIN

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்ததாக ஒருவரை பண்ருட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 பண்ருட்டி நகரப் பகுதியில் லாட்டரிச் சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 இதையடுத்து, போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். புதன்கிழமை காலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம், ஜாகீர் உசேன் தெருவைச் சேர்ந்த காதரை (60) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த ரூ. 300 மதிப்புள்ள வெளி மாநில லாட்டரிச் சீட்டுகள், ரூ. 200 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT