கடலூர்

வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் 

தினமணி

கடலூர் மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பண்ருட்டி வட்டச் செயலர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். நகர துணைச் செயலர் ஜி.முருகன், வட்ட துணைச் செயலர் என்.வெங்கடேசன், வட்டக்குழு ஆர்.ஜோதி, கே.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பி.துரை விளக்கவுரை ஆற்றினார். மாவட்டக்குழு கே.முத்துராமன், ஏ.லாரன்ஸ், ஆர்.பார்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 ஆர்ப்பாட்டத்தில், கடலூர் மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் நிலையில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 கடலூர்: இதேபோல, குடிநீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலர் சு.தமிழ்மணி தலைமை வகித்தார். நகரச் செயலர் அரிகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராமன், வி.அமாவாசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் வி.குளோப், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சுந்தர்ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். அப்போது, நாமம் இடப்பட்ட மண் பானைகளை கட்சியினர் தரையில் போட்டு உடைத்து முழக்கமிட்டனர். நிர்வாகிகள் எம்.வடிவேலு, பி.வெங்கட், எஸ்.பாக்கியம், இந்திரா, ஆர்.வீரப்பன், டி.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT