கடலூர்

விபத்தைத் தடுக்க 41 இடங்களில் எச்சரிக்கை விளக்குகள்

DIN


விபத்தைத் தடுக்கும் வகையில் மேலும் 41 இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 5 முக்கியச் சாலைகள் உள்ளன. இங்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளாக 91 இடங்கள் கண்டறியப்பட்டன. 
அந்த வகையில், விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ. 19 லட்சத்தில் 50 இடங்களில் இந்த விளக்குகளைப் பொருத்தியுள்ளோம்.
திருச்சி - சென்னை சாலை, வேப்பூர் - கடலூர் சாலையில் இந்தப் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. மீதமுள்ள 41 இடங்களிலும் எச்சரிக்கை விளக்குகள், சிக்னல்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு ரூ. 15 லட்சம் வரை செலவாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT