கடலூர்

சாராயம் கடத்தலில் ஈடுபட்டவர் தடுப்புக் காவலில் கைது

DIN

சாராயம் கடத்தலில் தொடர்புடையவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்  வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். 
 சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் போலீஸார் கடந்த மே 29-ஆம் தேதி ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத பைக்கை மறித்து சோதனையிட்டதில், புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பைக்கை ஓட்டி வந்த பாகூர், முல்லை நகரைச் சேர்ந்த சின்னதம்பி மகன் ஊமையன் என்ற மூர்த்தி(35)   என்பவரை கைதுசெய்துநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர், அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 இவர் மீது கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவில் சாராயம் கடத்தல் தொடர்பாக 5 வழக்குகள்  நிலுவையில் உள்ளன. எனவே, இவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். அதன்படி போலீஸார் மூர்த்தியை தடுப்புக் காவலில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT