கடலூர்

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

குறிஞ்சிப்பாடியில் கடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 250 கிலோ நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறிஞ்சிப்பாடி கடை வீதி பகுதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் த.சக்கரவர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் பி.கணேசன் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் கடை வீதியில் சோதனை நடத்தினர். அப்போது, நெய்வேலியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறிய சரக்கு வாகனத்தில் நெகிழிப் பை, நெகிழிப் பொருள்களை கொண்டு வந்து குறிஞ்சிப்பாடி கடை வீதியில் உள்ள கடைகளில் விநியோகம் செய்தது தெரிய வந்தது.
 பேரூராட்சி அதிகாரிகள் அந்த வாகனத்திலிருந்த 50 கிலோ சில்வர் கோட்டிங் நெகிழிப் பேப்பரை பறிமுதல் செய்து ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும், கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட 200 கிலோ நெகிழிப் பொருள்களையும் பறிமுதல் செய்து ரூ.2,000 அபராதம் விதித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT