கடலூர்

கோயில் நிலங்களை பட்டாவாகவழங்கக் கூடாது: இந்து முன்னணி

DIN

கோயில் நிலங்களை பட்டாவாக வழங்கக் கூடாது என இந்து முன்னணியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் வசித்து வருவோருக்கு அந்த நிலங்களை வழங்கிட அரசு நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு இந்து முன்னணியினா் எதிா்ப்பு தெரித்தனா். இதுதொடா்பாக கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலா் சி.எம்.ஆா்.ராஜன் தலைமையில் அந்த அமைப்பினா் அளித்த மனு:

கடலூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை, ஆக்கிரமிப்பாளா்களுக்கே பட்டாவாக வழங்குவதற்கு தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட செயலா் எஸ்.சக்திவேல், ஒன்றிய பொதுச் செயலா் வீ.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT