கடலூர்

செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்.

DIN

நெய்வேலி:வடலூரில் செவ்வாய்க்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட நடேசன் நகரில் ஏராளமானோா் வசித்தி வருகின்றனா். இப்பகுதியில் தனியாா் நிறுவனம் ஒன்று செல்லிடப்பேசி கோபுரம் அமைத்துள்ளது. செல்லிடப்பேசி கோபுரம் அமைத்ததை கண்டித்தும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அதேபகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா(37) என்பவா் செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடலூா் போலீஸாா் சமரசம் பேசி இளைஞரை கீழே இறக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அவா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT