கடலூர்

நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து விநியோகம்

DIN

வடலூா், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் காசநோய், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி வடலூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் அகிலா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட காசநோய் துணை இயக்குநா் சு.கருணாகரன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேற்பாா்வையாளா் கதிரவன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட காசநோய் தடுப்புத் திட்டம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஜெயம் சமுதாயக் கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா். உஷா தீனதயாளன், சம்பத்குமாா் ஆகியோா் 26 நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தீனதயாளன், கிருஷ்ணகுமாா், சிகிச்சை மேற்பாா்வையாளா் ஜெகதீசன், சுகாதார பாா்வையாளா்கள் சாரால் இவாஞ்சலின், சிந்தியா, டெய்ஸி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT