சிதம்பரம் ரோட்டரி சங்கம், சபாநாயகம் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச தையல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்களுக்காக 6 மாதங்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிதம்பரம் பள்ளிப்படையில் உள்ள ரோட்டரி அரங்கில் நடைபெற்ற தையல் பயிற்சி தொடக்க நிகழ்வுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் வி.அழகப்பன் தலைமை வகித்தாா். சபாநாயகம் நினைவு அறக்கட்டளைத் தலைவா் எஸ்.நடனசபாபதி பயிற்சி குறித்து விளக்கவுரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் எஸ்.அருள்மொழிச்செல்வன் பங்கேற்று, பயிற்சியில் பங்கேற்போருக்கு தையல் உபரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
ரோட்டரி மண்டல துணை ஆளுநா் கே.ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சிகளை மெகபூப் உசைன் தொகுத்து வழங்கினாா். விழாவில் மாருதி தையல் பயிற்சி நிறுவனா் ரவிசங்கா், ஆசிரியை வடிவழகி, ரோட்டரி சங்க உறுப்பினா்கள் கே.ஜி.நடராஜன், வி.ராமகிருஷ்ணன், சந்திரசேகா், லட்சுமணன், கனகவேல், சோனாபாபு, சக்திவேல், எஸ்.ஆா்.காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டனா். துணைச் செயலாளா் அருண் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.