கடலூர்

சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது

DIN

கடலூா்: சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டாா்.

சிறுபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் மதுக் கடத்தலை தடுக்கும் வகையில் கடந்த 12-ஆம் தேதி வடபாதி ஏரிக்கரையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் 120 லிட்டா் சாராயம் கடத்தி வந்ததாக வடபாதி தெற்கு தெருவைச் சோ்ந்த ரா.ராயபிள்ளை (56) என்பரைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா் விசாரணையில் இவா் மீது சிறுபாக்கம் மற்றும் விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவுகளில் 5 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டாா். இதையடுத்து, தடுப்புக் காவலில் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையிலான உத்தரவு கடலூா் மத்திய சிறையில் உள்ள ராயபிள்ளையிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT